Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஜனவரி 16 , பி.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மீது, பொலிஸாரால் உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பொது அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என, ஸ்டோக்ஸ் மீதும் மேலும் இருவர் மீதும், இவ்வாறு குற்றச்சாட்டுப் பதியப்பட்டுள்ளது.
கடந்தாண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி, பிறிஸ்டலில், இரவுக் களியாட்ட விடுதிக்கு வெளியே இடம்பெற்ற மோதல் தொடர்பாகவே, ஸ்டோக்ஸ் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது/அதற்கு மேலதிகமாக அபராதம் விதிக்கப்படும்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்காக, அவர் இன்னமும் விளையாடத் தெரிவுசெய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
59 minute ago
1 hours ago