Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெற்றுவந்த, 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து சம்பியனாகியுள்ளது. கொல்கத்தாவில், நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்து வந்தே, 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்னை வென்று சம்பியனாகியிருந்தது.
இறுதிப் போட்டியில், இங்கிலாந்து சார்பாக, பில் பொடென் இரண்டு கோல்களையும் றிஹியன் ப்ரூஸ்டர், மோர்கன் கிப்ஸ் வைட், மார்க் குஹீ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்பெய்ன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் சேர்ஜியோ கோமிஸ் பெற்றிருந்தார்.
இத்தொடரில், பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாணியில் வழமையாக விளையாடிய ஸ்பெய்ன், இறுதிப் போட்டியில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதும் வழமையாக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்துகின்ற இங்கிலாந்து, இறுதிப் போட்டியில் பந்தைக் கட்டுப்படுத்தும் பாணியில் விளையாடியமையே இங்கிலாந்து சம்பியனாவதற்கு காரணமாய் அமைந்திருந்தது. இறுதிப் போட்டியில், ஐந்து கோல் பெறும் உதைகளையே ஸ்பெய்ன் உதைத்திருந்த நிலையில், 25 கோல் பெறும் உதைகளை இங்கிலாந்து உதைத்திருந்தது.
இதேவேளை, மூன்றாமிடத்துக்கான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் மாலியை வென்ற பிரேஸில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. பிரேஸில் சார்பாக, அலன், யுரி அல்பேர்ட்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இத்தொடரின் நாயகனாக பில் பொடென் தெரிவாகியதோடு, இத்தொடரில் அதிக கோல்களைப் பெற்றவர்களுக்கான தங்கப் பாதணியை, எட்டுக் கோல்களைப் பெற்று றிஹியன் ப்ரூஸ்டர் பெற்றதோடு, தொடரின் சிறந்த கோல் காப்பாளராக கப்ரியல் பிறாஸாவோ தெரிவாகியிருந்தார்.
2 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
21 Jul 2025