2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஹமில்டனும் றொஸ்பேர்க்கும் மோத வென்றார் மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்

Shanmugan Murugavel   / 2016 மே 16 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிஷ் கிரான்ட் பிறிக்ஸில் மெர்சிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டனும் ஜெர்மனியச் சாரதியான நிக்கோ றொஸ்பேர்க்கும் மோதிக் கொள்ள, ரெட் புல் அணியின் பெல்ஜியச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பன், போர்மியுலா வண் வரலாற்றின் இளம் வெற்றியாளராக மாறினார்.

மேற்படி பந்தயத்தின் முதலாவது சுற்றிலேயே றொஸ்பேர்க்கை முந்த முயன்ற தற்போதைய போர்மியுலா வண் சம்பியனான ஹமில்டன் புற்தரைக்கு சென்று சுழன்று றொஸ்பேர்க்குடன் மோதியதில் அதன் பின்னர் இப்பந்தயம் ரெட்புல்லுக்கும் பெராரிக்குமிடையிலானதாக மாறியிருந்தது.

இந்நிலையில், சக ரெட்புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் ரிக்கார்டோவுக்கு அவ்வணி மூன்று நிறுத்த உத்தியைக் கையாள, 28 சுற்றுக்களுக்கு முன்னிலையில் இருந்த அவர் நான்காமிடத்துக்குச் செல்ல, இறுதி 22 சுற்றுக்களில் பெராரியின் பின்லாந்தின் சாரதியான கிமி றைக்கோனனை முந்த விடாமல் தடுத்திருந்த 18 வயதான வெர்ஸ்ட்டப்பன் வெற்றி பெற்றார்.

ரெட்புல்லின் கனிஷ்ட அணியான டோரோ றோஸோவிலிருந்து இந்தப் பந்தயத்திலேயே ரெட்புல்லுக்கு தரமுயர்த்தப்பட்டிருந்த வெர்ஸ்ட்டப்பன், தனது முதலாவது பந்தயத்திலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இப்பந்தயத்தின் இரண்டாம், மூன்றாமிடங்களை பெராரி அணியின் பின்லாந்துச் சாரதியான கிமி றைக்கோனனும் ஜெர்மனியச் சாரதியான செபஸ்டியான் வெட்டலும் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .