Editorial / 2019 ஒக்டோபர் 29 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் ஷென்ஸனில் நடைபெற்றுவரும் பெண்கள் டென்னிஸ் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், நேற்று நடைபெற்ற ஊதாக் குழுப் போட்டிகளில் உலகின் ஐந்தாம்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், எட்டாம்நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டொலினா ஆகியோர் வென்றுள்ளனர்.
உலகின் நான்காம்நிலை வீராங்கனையான கனடாவின் பியன்கா அன்ட்றீச்சுவை எதிர்கொண்ட றோமானியாவின் ஹலெப், முதலாவது செட்டை 3-6 என இழந்திருந்ததுடன், இரண்டாவது செட்டில் 5-6 என்ற நிலையில் போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்தார்.
எனினும், சுதாகரித்துக் கொண்டு போராடிய ஹலெப் இரண்டாவது செட்டை 7-6 (8-6) எனக் கைப்பற்றியதுடன், மூன்றாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி போட்டியை வென்றிருந்தார்.
இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, 7-6 (14-12), 6-4 என்ற நேர் செட்களில் வென்றிருந்தார்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் நடைபெற்ற சிவப்புக் குழுப்போட்டிகளில், உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை 5-7, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் உலகின் முதல்நிலைவீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி வென்றிருந்ததுடன், உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெற்றா குவிற்றோவாவை 7-6 (7-1), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நயோமி ஒஸாகா வென்றிருந்தார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago