Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று முன்தினம் புதன்கிழமை (31), தம்புள்ளையில் நடந்த நான்காவது போட்டியிலேயே அவுஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ள நிலையில், ஆடுகளத்தில் பந்துகள் விழுந்து தூசி கிளம்பி, விக்கெட்காப்பாளரிடம் செல்லாத, எட்டு தடவைகளே 250 ஓட்டங்கள் கடக்கப்பட்டிருந்தமை போன்ற, தங்களுக்கு பழக்கமில்லாத சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அவுஸ்திரேலிய வழியில் தொடரை வென்றதாக, அவுஸ்திரேலிய அணிக்கு பதில் தலைவராகக் கடமையாற்றும் டேவிட் வோணர் தெரிவித்துள்ளார்.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில், தனஞ்சய டி சில்வா 76, கெண்டக்கால் பின் தசைக் காயம் காரணமாக, போட்டியின் நடுவே வெளியே சென்று, பின்னர் இறுதியாக வந்த அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் 40 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜோன் ஹேஸ்டிங்ஸ் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது, அவரது சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி பந்துவீச்சு பெறுதி ஆகும்.
பதிலுக்கு 213 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, ஆரோன் ஃபின்ஞ் அதிரடியாகப் பெற்ற 55 (19), ஜோர்ஜ் பெய்லியின் ஆட்டமிழக்காத 90(85) ஓட்டங்களின் துணையோடு, 31 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, ஆறு விக்கெட்டுக்களால், இலகுவாக போட்டியை வென்று, ஒரு போட்டி மீதமிருக்கையில், 3-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்த வோணர், தமது வீரர்களில் ஒருவர் வேகமாக துடுப்பெடுத்தாடுவது சிறப்பானது எனவும், உண்மையாக, தனக்கு இந்தத் தொடரானது பார்ப்பதாக மட்டும் இருந்தது என்று கூறியுள்ளார். தனது வீரர்கள் துடுப்பெடுத்தாடும்போது, தான் எதிர் முனையில் இருந்ததாகவும் வீரர்கள் அறையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். ஃபின்ஞ், தனது பாணியில் விளையாடியதை தான் விரும்பியதாகவும், அவ்வாறே தாம் விளையாடுவதாகவும் அதேவே அவுஸ்திரேலியா வழி என வோணர் மேலும் தெரிவித்தார்.
தாங்கள் எப்போதும் அதுபோலவே விளையாடுவதாகத் தெரிவித்த வோணர், உங்களுக்கு உங்களின் வகிபாகம் என்னவெனத் தெரியும் என்று வீரர்களுக்கு கூறியதாக தெரிவித்த அவர், முதல் 10 ஓவர்கள் மட்டுமே புதிய பந்தாக இருக்குமென்றும் அதை தாங்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அந்த நிலைமைகளில் நல்ல ஆரம்பத்தைப் பெறுவதும் புதிய பந்தை தாம் துடுப்பெடுத்தாடும்போது பயன்படுத்திக் கொள்வதே முக்கியமானதாக இருந்ததாகத் தெரிவித்த வோணர், இல்லாவிடில், பந்து பழையதானால் என்ன நடக்குமென்று உங்களுக்கு தெரியுமென்றும் பந்து அதிகம் சுழலும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தொடர்ந்து இரண்டாவது தடவையாக அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த பெய்லியைப் புகழ்ந்த வோணர், அவரது ஆட்ட நுணுக்கத்தின்படி அவர் செயற்பட்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆசிய ஆடுகளங்களில் அவரது துடுப்பாட்டம், ஃபோர்ம் அதிசிறப்பாக இருந்ததாகவும் சிறப்பாக போட்டியை அவர் முடித்ததாக வோணர் தெரிவித்தார்.
தவிர, ஜோன் ஹேஸ்டிங்ஸையும் புகழ்ந்த வோணர், அவருக்கெதிராக துடுப்பெடுத்தாடுவது கடினம் என்றும், அதை அவர் வெளிப்படுத்தியதாகவும், அவரது நுணுக்கங்கள் சிறப்பானவை எனவும் அதனாலேயே அவர் சிறப்பான பெறுதியைப் பெற்றதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இலங்கையணித் தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிவிக்கப்படுகிறது.
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
2 hours ago
2 hours ago