Shanmugan Murugavel / 2016 மே 02 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜேம்ஸ் டெய்லர், தான் இறக்கப் போவதாக எண்ணியதாகத் தெரிவித்துள்ளார். இதயத்தில் ஏற்படும் அரிதான நோயால், கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற வேண்டியேற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலை நேரத்தில் வழக்கமான குறுகிய நித்திரைக்குப் பின்னர், உடற்பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும், அந்த உடற்பயிற்சிகளின் நிறைவில், தனது நெஞ்சு இறுக்கமடைவதாக உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுக்கமடைந்தமை தவிர, அதிகமாக அது துடித்ததாகவும், சுமார் 4 பாகை செல்சியஸே காணப்பட்ட வெப்பநிலையில், தனது உடல் கடுமையாக வியர்க்கத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
'இதன்போது தான் நான், இறக்கப் போகிறேனென நினைத்தேன்" என அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமாக, இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள், இறந்த பின்னரே அவருக்கு இந்த நோயிருந்தமை கண்டுபிடிக்கப்படுவது வழக்கமெனவும், ஜேம்ஸ் டெய்லர், மிகவும் ஆரோக்கியமாக இருந்ததன் காரணமாகவே அவரால் உயிர்தப்ப முடிந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago