Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளராக, அவ்வணியின் தற்காலிக முகாமையாளராகப் பணியாற்றி வந்த கரித் சௌத்கேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
4 போட்டிகளுக்குத் தற்காலிக முகாமையாளராக நியமிக்கப்பட்டிருந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணம், 2020ஆம் ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஷிப் ஆகியனவற்றுக்கு, அவர் பொறுப்பு வகிக்கவுள்ளார்.
அவருக்கான ஊதியம், ஆண்டுக்கு 2.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்துக்காக 57 போட்டிகளில் விளையாடிய சௌத்கேட், 96ஆம் ஆண்டு அரையிறுதியில், தண்ட உதைகளில் ஒன்றைத் தவறவிட்டமைக்காக அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago