2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நேபாளம், நெதர்லாந்து அணிகளுக்கு 20-20 அந்தஸ்து

A.P.Mathan   / 2014 ஜூன் 28 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளம் மற்றும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு டுவென்டி டுவென்டி அந்தஸ்து வழங்கப்பட்டுளளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் கடந்த இரு தினங்களில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரிலேயே துணை அங்கத்துவ நாடுகளான நேபாளம், நெதர்லாந்து அணிகளுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த வருட உலக 20-20 தொடருக்கு இரு அணிகளும் தகுதி பெற்ற அதேவேளை சிறப்பாக தங்கள் திறைமைகளையும் வெளிக்காட்டியிருந்தனர். 
 
ஏற்கெனவே துணை அங்கத்துவ நாடுகளில் 6 நாடுகள் குறித்த அந்தஸ்தை வைத்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, பபுவா நியூகினியா, ஹொங் கொங், ஐக்கிய அரபு ராட்சியம் ஆகிய நாடுகளே அவை. குறித்த 20-20 அந்தஸ்தை வைத்திருக்கும் அணிகள் 20-20 சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X