2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

100ஆவது பட்டம் வென்றார் பெடரர்

Editorial   / 2019 மார்ச் 03 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் ஏழாம் நிலை டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர், தனது 100ஆவது தனிநபர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இடம்பெற்றுவந்த டுபாயின் டென்னிஸ் சம்பியன்ஷிப்ஸ் தொடரில் சம்பியனானதன் மூலமே, தனது 100ஆவது தனிநபர் பட்டத்தை, 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய பெடரர் கைப்பற்றினார்.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை எதிர்கொண்ட சுவிற்ஸர்லாந்தின் பெடரர், 6-4 என்ற ரீதியில் முதலாவது செட்டை ஓரளவு இலகுவாகக் கைப்பற்றினார். எனினும், 20 வயதான சிட்டிபாஸ், 37 வயதான பெடரருக்கு பலத்த சவாலை வழங்கியிருந்தார். எவ்வாறெனினும், இரண்டாவது செட்டையும் 5-4 எனக் கைப்பற்றிய பெடரர் சம்பியனானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .