Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான, துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் 18ஆம் இடத்துக்கு இலங்கையின் குசல் மென்டிஸ் முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 100 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே, 29ஆம் இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி, 18ஆம் இடத்தை குசல் மென்டிஸ் அடைந்துள்ளார்.
குறித்த டெஸ்டில் 42 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் நிரோஷன் டிக்வெல்ல, 45ஆம் இடத்திலிருந்து, எட்டு இடங்கள் முன்னேறி 37ஆம் இடத்தை அடைந்துள்ளார். இதுதவிர, இதே டெஸ்டில் 75 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையின் ஒஷாட பெர்ணான்டோ, 100ஆம் இடத்திலிருந்து 35 இடங்கள் முன்னேறி 65ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், மேற்கூறப்பட்ட டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால், 33ஆம் இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி 30ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
இதேவேளை, இதே டெஸ்டில், நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்ணான்டோ, 49ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி 43ஆம் இடத்தை அடைந்துள்ளார். இதுதவிர, இந்த டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித, 59ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி 51ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், இலங்கையுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 0-2 என தென்னாபிரிக்கா இழந்ததன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில், இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்துக்கு கீழிறங்கியுள்ளது. அந்தவகையில், முதற்தடவையாக இரண்டாமிடத்துக்கு நியூசிலாந்து முன்னேறியுள்ளது.
முதல் 10 அணிகளின் தரவரிசை பின்வருமாறு,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago