2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

2ஆவது டெஸ்டில் இந்தியா முன்னிலை

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா முன்னிலையில் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், டெல்லியில் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, யஷஸ்வி ஜைஸ்வாலின் 175, அணித்தலைவர் ஷுப்மன் கில்லின் ஆட்டமிழக்காத 129, சாய் சுதர்ஷனின் 87, துருவ் ஜுரேலின் 44, நிதிஷ் குமார் ரெட்டியின் 43, லோகேஷ் ராகுலின் 38 ஓட்டங்களோடு 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்தியது. ஜோமெல் வொரிக்கான் 3, அணித்தலைவர் றொஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், இரவீந்திர ஜடேஜா (3), குல்தீப் யாதவ் (5), ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ்ஜிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது. அலிக் அதனஸே 41, ஷாய் ஹோப் 36, டுட்டினேரியன் சந்திரபோல் 34, அன்டர்சன் பிலிப் ஆட்டமிழக்காமல் 24, காரி பியர் 23 ஓட்டங்களைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .