Shanmugan Murugavel / 2022 ஜூன் 16 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI) இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பல்லேகலவில் இன்று நடைபெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஆரோன் பின்ஞ், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அவுஸ்திரேலியா சார்பாக சுழற்பந்துவீச்சாளர் மத்தியூ குஹ்னெமன் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதோடு காயமடைந்த அஸ்தன் அகரைப் பிரதியிடுவதோடு, காயமடைந்த மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், ஜஹை றிச்சர்ட்ஸனை ட்ரெவிஸ் ஹெட்டும், மிற்செல் ஸ்வப்ஸனும் பிரதியிட்டுள்ளனர்.
இலங்கை சார்பாக காயமடைந்த வனிடு ஹஸரங்கவை ஜெஃப்ரி வன்டர்சே பிரதியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா: 1. டேவிட் வோர்னர், 2. ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), 3. ஸ்டீவ் ஸ்மித், 4. மர்னுஸ் லபுஷைன், 5. அலெக்ஸ் காரி (விக்கெட் காப்பாளர்), 6. ட்ரெவிஸ் ஹெட், 7. கிளென் மக்ஸ்வெல், 8. பற் கமின்ஸ், 9. மிற்செல் ஸ்வப்ஸன், 10. ஜொஷ் ஹேசில்வூட், 11. மத்தியூ குஹ்னெமன்.
இலங்கை: 1. தனுஷ்க குணதிலக, 2. பதும் நிஸங்க, 3. சரித் அஸலங்க, 4. குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 5. தனஞ்சய டி சில்வா, 6. தசுன் ஷானக (அணித்தலைவர்), 7. சாமிக கருணாரத்ன, 8. ஜெஃப்ரி வன்டர்சே, 9. டுனித் வெல்லலாகே, 10. துஷ்மந்த சமீர, 11. மகேஷ் தீக்ஷன.
33 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
48 minute ago
2 hours ago