2021 மே 06, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை 2 விக்கெட்டுகளால் வென்றது அவுஸ்திரேலியா

Super User   / 2011 நவம்பர் 21 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்று திங்கட்கிழமை 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றுள்ளது

தென்னாபிரிக்காவின் ஜொஹான்னர்ஸ்பர்கில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 266  ஓட்டங்களையும் அவுஸ்திரேலி அணி 296 ஓட்டங்களையும் பெற்றன. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 339 ஓட்டங்களைப் பெற்றது.

இதனால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 310 ஓட்டங்கள் தேவைப்பட்டன. நான்காவது நாளான நேற்று அவ்வணி ஞாயி;ற்றுக்கிழமை அவ்வணி 3 விக்கெட் இழப்பிற்கு  142 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று மேலும் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அவ்வணி வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் உஸ்மான் கவாஜா 65 ஓட்டங்களையும் ரிக்கி பொன்டிங் 62 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் வேர்னன் பிலாந்தர் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்  பற் கும்மின்ஸ் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் தட்டிச்சென்றார். இவர் இரண்டாவது இன்னிங்ஸில் 79 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டக்காராக வேர்னன் பிலாந்தர் தெரிவானார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .