2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இலகு வெற்றி

Super User   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பெங்களூர் ரோயல் சலஞ்செர்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்களினால்  இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.  இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பெங்களூர் ரோயல் சலஞ்செர்ஸ் அணி 15 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 70 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஐ.பி.எல்  போட்டிகளில் பெறப்பட்ட மூன்றாவது குறைந்த ஓட்டங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் விராத் கோலி 21(25பந்துகள், 4 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும், மிச்சல் ஸ்டார்க் 18(16 பந்துகள், 4 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிரவின் தம்பே 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும்,  கேன் ரிச்சட்சன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுக் கொண்டது. இதில் அஜிங்கையா ரெஹானே 23(19 பந்துகள், 4 ஓட்டங்கள் 4) ஓட்டங்களையும்,  ஷேன் வொட்சன் 24(24பந்துகள், 4 ஓட்டங்கள் 1, 6 ஓட்டங்கள் 1 ) ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக பிரவின் தம்பே தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான்ரோயல்ஸ்  அணி 4 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X