2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இங்கிலாந்தில் தோல்வியுடன் இலங்கை அணியின் ஆரம்பம்

A.P.Mathan   / 2014 மே 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, எசெக்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது பயிற்சிப் போட்டியில் எசெக்ஸ் அணி, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. சீரற்ற வாநிலை காரணமாக 50 ஓவர்கள் போட்டி 21 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் எசெக்ஸ் அணி துடுப்பாடும் வேளையில் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டன. எசெக்ஸ் அணி 21 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அலிஸ்டயர் குக் 71 ஓட்டங்களையும், பென் போஎக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக 82 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

பந்துவீச்சில் சுரங்க லக்மால், தம்மிக்க பிரசாத் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இலங்கை அணிக்கு 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு டக் வேர்த் லூயிஸ் முறைப்படி வழங்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 21 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தினேஷ் சந்திமால் 31 ஓட்டங்களையும் திலகரட்ன டில்ஷான் 22 ஓட்டங்களையும், சத்துரங்க டி சில்வா ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் எசெக்ஸ் அணி சார்பாக ஒலிவர் நியூபை 3 விக்கெட்களையும், க்ரெக் ஸ்மித், மொன்டி பனேசர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அணி அடுத்த பயிற்சிப் போட்டியில் 16ஆம் திகதி கென்ட் அணியுடன் விளையாடவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X