2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அத்தெல்டிக் மாட்ரிட் அணி சம்பியன்

A.P.Mathan   / 2014 மே 18 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பெனிஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட தொடரில் அத்தெல்டிக் மாட்ரிட் அணி சம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. பார்சில்னோ அணியுடன் நடைபெற்ற போட்டியில் 1 இற்கு 1 என்ற சமநிலையான முடிவைப் பெற்றதன் மூலம் முதலிடத்தைப் பெற்று 18 வருடங்களின் பின்னர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்கள். இது அவர்களின் பத்தாவது சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் நாட்டின் மிகப்பலமான பார்சிலோனோ, ரியல் மாட்ரிட் கழகங்களை வீழ்த்தி வெற்றி பெறுவது என்பது மிகக்கடினமான ஒன்று. இருப்பினும் இந்த வருட தொடரில் தமது சிறப்பான போராட்டத்தை வெளிக்காட்டி வெற்றி பெற்றுள்ளது அத்தெல்டிக் மாட்ரிட் அணி.

இந்த வருடம் விளையாடிய 38 போட்டிகளில் அத்தெல்டிக் மாட்ரிட் அணி 28 வெற்றிகளையும், 6 சமநிலை முடிவுகளையும் பெற்றுள்ளதோடு, 4 தோல்விகளையும் சந்தித்து 90 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றது. இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள பார்சிலோனா அணி 38 போட்டிகளில் 27 வெற்றிகளையும், 6 சமனிலை முடிவுகளையும், 5 தோல்விகளையும் சந்தித்து 87 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

38 போட்டிகளில் விளையாடிய  ரியல் மாட்ரிட் அணி 27 வெற்றிகளையும், 6 சமனிலை முடிவுகளையும், 5 தோல்விகளையும் சந்தித்து 87 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் கோல் வித்தியாசத்தில் பார்சில்னோ அணி இரண்டாமிடத்தைப் பெற்றது. அத்தெல்டிக் க்ளப், செவியா அணிகள் முறையே நான்காம், ஐந்தாமிடங்களைப் பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X