2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் பதவியில் தொடர்ந்தும் நஜாம் சேதி

A.P.Mathan   / 2014 மே 22 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை  தலைவர் பதவியில் நஜாம் சேதி தொடர முடியும் என பாகிஸ்தான் மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் நஜாம் சேதியின் பதவியையும் அவரின் முகாமைத்துவம் மற்றும் முகாமைத்துவ மாற்றங்களையும் ரத்து செய்து சகா அஷ்ரப் தலைவர் பதவியை வகிக்க முடியும் என தீர்ப்பளித்து இருந்தது. இந்த நிலையில் சகா அஷ்ரப் இன் பதவியை ரத்து செய்து நஜாம் சேதியை பதவியில் அமர்த்திய விளையாட்டுத் துறை அமைச்சு மேன் முறையீட்டு நீதிமன்றில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்து இருந்தது. 
 
இந்த நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றம், விளையாட்டுத் துறை அமைச்சின் மேன் முறையீட்டை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் இறுதி முடிவு ஒன்று அறிவிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X