2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தென் ஆபிரிக்க டெஸ்ட் தலைவராக ஹாசிம் அம்லா

Super User   / 2014 ஜூன் 03 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் ஆபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக ஹாசிம் அம்லா அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக கடைமையாற்றிய கிரேம் ஸ்மித் அண்மையில்  ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பப்ட்டுள்ள வெற்றிடத்திற்கே அம்லா நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவராக கடைமையாற்றி வரும் AB DE வில்லியர்ஸ் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கபப்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஹாசிம் அம்லா தான் அணித் தலைமைப் பொறுப்பை ஏற்க்க விரும்புவதாக அறிவித்தார். அதனடிப்படையில் அவர் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆபிரிக்க டெஸ்ட்  அணிக்கு ஹாசிம் அம்லா தலைவராகவும், ஒரு நாள்ப் போட்டி அணிக்கு உப தலைவராகவும் செயற்ப்படும் அதேவேளை AB DE வில்லியர்ஸ் ஒரு நாள்ப் போட்டி அணிக்கு தலைவராகவும், டெஸ்ட்  அணிக்கு உப தலைவராகவும் செயற்ப்படுவார்கள். அண்மைக்கலமாக ஒரு நாள்ப் போட்டிகளில் சேர்க்கப்படாமல் இருந்த ஜக்ஸ் கலிஸ் மீண்டும் அணியில் இணைக்கப்படுள்ளார். இவர் டெஸ்ட்ப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. புதிய வீரர்களாக துடுப்பாட்ட வீரரான ஸ்டயான் வன் சைல், சுழல்ப் பந்து வீச்சாளரான டனி பிஎட் ஆகியோர் டெஸ்ட் அணியில் இணைக்கபட்டுள்ளனர்.
 
தென் ஆபிரிக்க அணி இழந்த முதலிடத்தை மீண்டும் பெறுவதே தனது மிகப் பெரிய இலக்கு என தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார். தன் துடுப்பாட்டம் இதன் மூலம் பாதிக்கப்பட மாட்டாது எனவும், அணிக்காக ஓட்டங்களை குவிக்கும் போது அணி வெற்றியைப் பெறும் எனவும் ஹாசிம் அம்லா மேலும் தெரிவித்துள்ளார். 

அணி விபரம் 

டெஸ்ட் - ஹாசிம் அம்லா, அல்விரோ பீட்டர்சன், டீன் எல்கர், பப் டு  பிலேசிஸ், AB DE வில்லியர்ஸ், JP டுமினி, ஸ்டயான் வன் சைல், வெர்னொன் பிலாண்டர், மோர்னி மோர்க்கல், டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர், கைல் அப்போட், குயின்டன் டி கொக், டனி பிஎட், வேய்ன் பார்னல்
 
ஒரு நாள் சர்வதேசப் போட்டி - AB DE வில்லியர்ஸ், ஹாசிம் அம்லா, ஜக்ஸ் கலிஸ், வில்லியர்ஸ்,  JP டுமினி , டேவிட் மில்லர், வேய்ன் பார்னல், ரயன் மக்லரன், டேல் ஸ்டெயின், மோர்னி மோர்க்கல், இம்ரான் தாகிர், வெர்னொன் பிலாண்டர், பப் டு  பிலேசிஸ், ஆரோன் பங்கிஷோ, பெரோன் ஹென்ரிக்ஸ் 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X