2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நடால்

Kanagaraj   / 2014 ஜூன் 09 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், களிமண் தரையின் அரசன் என வர்ணிக்கப்படும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்  வெற்றியைப் பெற்று சம்பியன் ஆகியுள்ள அதேவேளை புதிய சாதனையையும் படைத்துள்ளார்.

சேர்பிய வீரர் நொவாக் ஜோக்கோவிக் உடன் மோதி, முதல் செட்டில் 3 இற்கு 6 என தோல்வியடைந்தார். இருப்பினும் அடுத்த மூன்று செட்களிலும் 7 இற்கு 5, 6 இற்கு 2 , 6 இற்கு 4 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றார். இந்த இறுதிப் போட்டி வெற்றி மூலமாக தொடர்ச்சியாக  ஐந்தாவது தடவை பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரினை வெற்றி பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

4 தடவைகள் வெற்றி பெற்றமையே சாதனையாக இருந்தது. அத்துடன்; ரபேல் நடால் பிரெஞ்சு பகிரங்க டெனிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை 9 தடவைகள் வென்று கூடுதலான தடவைகள் வென்றவர் சாதனையையும் தன்னகத்தே கொண்டுள்ளார்;. இறுதியாக விளையாடிய 10 தடவைகளில் 9 தடவைகள் அவர் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .