2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பீட்டர்சன் இல்லாமல் இங்கிலாந்து பலமிழந்துள்ளது: சங்கா

Kanagaraj   / 2014 ஜூன் 11 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெவின் பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணியின் மத்திய துடுப்பாட்ட வரிசை பலமிழந்ததாக காணப்படுகின்றது என இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

அவர் என்ன காரணத்திற்காக அணியை விட்டு நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர். தனது அணிக்கு வெற்றிகளைப் பெற்றுத் தரக் கூடியவர். எதிரணி வீரானாக அவர் அணியில் இல்லை என்பது நன்மை என்றே நினைப்பேன்.

அவர் எமக்கு எதிராக விளையாடினால் அவர் என்ன செய்வார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதை கடந்த காலங்களில் எமக்கு எதிராக செய்துள்ளார் என தெரிவித்த சங்ககார, அணிக்குள் பிரச்சினைகள் வருவது சகஜம். அவை தீர்கபப்ட வேண்டும். எமது அணிக்குள்ளும் இப்படி பிரச்சினைகள் இருந்துள்ளன. அவற்றை தீர்த்து சரியாக விளையாடுகின்றோம். எல்லா வீரர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

இலங்கை அணியில் லசித் மாலிங்க பாப்பவர்களிற்கு வித்தியாசமாக இருப்பார். ஆனால் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அவர்தான் இலங்கை அணியின் துருப்புச் சீட்டு. அதே போன்றுதான் கெவின் பீட்டர்சன், என குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X