2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஐ.பி.எல் சூதாட்ட விசாரணைக் குழுவில் கங்குலி

Kanagaraj   / 2014 ஜூன் 11 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் சூதாட்ட விசாரணைக் குழுவில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி இணைந்துள்ளார்.  நீதிபதி முகுல் முட்கள் தலைமையிலான விசாரணைக் குழு நேற்றைய தினம் சௌரவ் கங்குலியை சந்தித்து உரையாடியுள்ளனர்.

அதனடிப்படையில் சௌரவ் கங்குலி விசாரணைக் குழுவிற்கு உதவிகளை வழங்கும் ஒருவராக செயற்ப்படவுள்ளார். கிரிக்கெட் நுணுக்கங்களை விசாரனைகளின் போது அறிந்து கொள்ள வேண்டிய தேவை ஒன்று இருப்பதனால் கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தக் குழுவில் தேவை என்பதை முகுல் முட்கள் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.

கடந்த மாதம் நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கி இருந்த நிலையில், கடந்த ஆறாம்,ஏழாம் திகதிகளில் நடந்த விசாரணைக் குழுவின் கூட்டத்தில் பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். கங்குலியின் உதவியுடன் நடைபெறவுள்ள விசாரணைகளின் அறிக்கை ஓகஸ்ட் மாதம் நீதிமன்றில் சமர்ப்பிக்கபப்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X