2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

உலகக் கிண்ணம் நான்காவது நாள் முடிவுகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 16 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் நான்காவது நாள் போட்டிகளில் சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஆர்ஜன்டீனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. முதற்ப் போட்டி  சுவிட்ஸர்லாந்து - எக்குவாடர் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் எக்குவாடர் அணி ஆதிக்கம் செலுத்திய போதும் போட்டி நிறைவடைய 30 செக்கன்கள் மீதமுள்ள நிலையில் சுவிட்ஸர்லாந்து வீரர் ஹரிஸ் செபிரோவிச் அடித்த கோல் மூலம் அவ்வணி வெற்றி பெற்றது. என்னெர் வலன்சியா 22ஆவது நிமிடத்தில் எக்குவாடர் அணிக்கு முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். அட்மிர் மெஹ்மதி 47ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். போட்டியின் நாயகனாக செர்டன் ஷக்ரி போட்டியின் நாயகனாக தெரிவானார்.

பிரான்ஸ் அணியானது ஹொன்டியுரஸ் அணியை 3 - 0 என வெற்றி பெற்றது. கரீம் பென்சீமா 45ஆவது நிமிடத்தில் பனால்டி உதை மூலமாக முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். இரண்டாவது கோல் ஹொன்டியுரஸ் வீரரினால் அடிக்கப்பட்ட சொந்த கோலாக அமைந்தது. மூன்றாவது கோல் 72ஆவது நிமிடத்தில் கரீம் பென்சீமாவினால் அடிக்கப்பட்டது. போட்டியின் நாயகனாக கரீம் பென்சீமா தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாவது போட்டி ஆர்ஜன்டீனா - பொஸ்னியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி 2- 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது. போட்டியின் முதல் கோல், போட்டி ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் பொஸ்னியா வீரர் சீட் கலசொனிச் மூலமாக சொந்த கோலாக ஆர்ஜன்டீனா அணிக்கு கிடைத்தது. இரண்டாவது கோல் ஆர்ஜன்டீனா அணியின் தலைவர் லியோனல் மெஸ்சியினால் 65ஆவது நிமிடத்தில் அடிக்கப்பட்டது. போட்டியின் 84ஆவது நிமிடத்தில் பொஸ்னியா வீரர் வெடட் இபிசெவிச் அடித்த கோல் மூலமாக தமது முதல் கோலை பொஸ்னியா  பெற்றுக் கொண்டது. போட்டியின் நாயகனாக லியோனோல் மெஸ்சி தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X