2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அரை இறுதியில் பிரேசில், ஜேர்மனி

A.P.Mathan   / 2014 ஜூலை 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அரை இறுதிப் போட்டிகளுக்கு பிரேசில் மற்றும் ஜேர்மனி அணிகள் தெரிவாகியுள்ளன. நேற்று இடம்பெற்ற போட்டிகளில் முதற்ப் போட்டியில் ஜேர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதின. 
 
இந்தப் போட்டியில் ஜேர்மனி அணி 1 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜேர்மனி அணி சார்பாக மட்ஸ் ஹம்மெலஸ் 13ஆவது நிமிடத்தில் கோலை அடித்தார். பிரான்ஸ் அணி காலிறுதிப் போட்டிகளில் 7 தடவை விளையாடியுள்ளது. இரண்டாவது தடவையாக தோல்வியை சந்த்திதுள்ளது. ஜேர்மனி அணி 13ஆவது தடைவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. கூடுதலான அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ள அணி ஜேர்மனி என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவது போட்டி பிரேசில் , கொலம்பியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரேசில் அணி 2 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரேசில் அணித் தலைவர் தியாகோ சில்வா 7 வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். 69 வது நிமிடத்தில் டேவிட் லூயிஸ் இரண்டாவது கோலை அடித்தார். 80 வது நிமிடத்தில் ஜேம்ஸ் ரொட்றிகஸ் பனால்டி உதை மூலமாக கொலம்பியா அணிக்கான கோலை அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 10வது தடவையாக பிரேசில் அணி அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளது. கடந்த இரு உலகக் கிண்ணங்களிலும் காலிறுதிப் போட்டிகளுடன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்து. 
 
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிரேசில், ஜேர்மனி அணிகள் அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X