.jpg)
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அரை இறுதிப் போட்டிகளுக்கு ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து அணிகள் தெரிவாகியுள்ளன.
முதலாவது காலிறுதிப் போட்டி ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனா வீரர் கொன்சலோ ஹியூகைன் அடித்த கோல் ஆர்ஜன்டீனா அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆர்ஜன்டீனா அணி 1990ஆம் ஆண்டுக்கு பின்னார் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. ஐந்தாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது தடவையாக காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி விளையாடி இருந்தது. முதல் காலிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணி 1986ஆம் ஆண்டு வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் நாயகனாக ஆர்ஜன்டீனா அணியின் கொன்சலோ ஹியூகைன் தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது போட்டி நெதர்லாந்து, கொஸ்டரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சமநிலை முறியடிப்பு பனால்டி உதை மூலம் நெதர்லாந்து அணி 4 இற்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. கடந்த முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவான நெதர்லாந்து அணி, ஐந்தாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் குறித்த 90 நிமிடங்களில் பெறவில்லை. மேலதிக நேரத்திலும் பெறவில்லை. நெதர்லாந்து அணி ஐந்தாவது தடவையாக அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. போட்டியின் நாயகனாக கொஸ்டரிக்கா அணியின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து அணிகள் அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.