
இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, இன்று கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடை பெறவுள்ளது.
பகலிரவுப் போட்டியாக பிற்பகல் 2.30 இற்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கவுள்ளது. முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இலங்கையில் வைத்து முதற் தடவையாக தொடரைக் கைப்பற்றிக் கொள்ளும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகத் தன்மையைக் தரக் கூடிய மைதானம் என்ற காரணத்தினால் தென் ஆபிரிக்கா அணிக்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
இரண்டு அணிகளுக்குமிடையில் பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை அணி இந்த மைதானத்தில் விளையாடிய 11 போட்டிகளில் 5 இல் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி கைவிடப்பட்ட போட்டியாக அமைந்தது.
இலங்கை அணி சார்பாக இன்றைய போட்டியில் திசர பெரேரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் ஆபிரிக்கா அணி மாற்றங்கள் இன்றி அதே அணியுடன் களமிறங்கும் என நம்பப்படுகின்றது.
நாணய சுழற்சி அதிகமாக போட்டியின் முடிவை தீர்மானிக்கும் மைதானத்தில் இலங்கை அணி வெற்றி பெற போராடும் என எதிர்பார்க்கலாம்.