2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

லூயிஸின் மீள் முறையீடு ஏற்கப்படவில்லை

A.P.Mathan   / 2014 ஜூலை 11 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் உருகுவே, இத்தாலி அணிகளுக்கிடையிலான போட்டியின் போது எதிரணி வீரரை கடித்தமைக்காக உருகுவே நட்சத்திர வீரர்  லூயிஸ் சொரஸ் நான்கு மாத தடைக்கு உள்ளானர். 
 
அந்த தண்டனையை குறைக்குமாறு கோரி சொரஸ் மற்றும் உருகுவே கால்பந்தாட்ட சம்மேளனதினால் மீள் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் குறித்த மீள் முறையீட்டை ஏற்பதில்லை என்ற முடிவை சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மீள் முறையீட்டுக் குழு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னரும் இதுபோன்ற இரு சம்பவங்களில் சொரஸ் ஈடுப்பட்டமையே இந்த கடும் தண்டனைக்கு காரணம் ஆகும். 
 
லூயிஸ் சொரஸ் நான்கு மாதங்களுக்கு கால்பந்தாட்ட மைதானங்களுக்கு செல்ல முடியாது, 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாது என்ற வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்து பன்னிரெண்டாயிரம் அமெரிக்கா டொலர்களும் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X