2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நெதர்லாந்துக்கு உலகக்கிண்ண மூன்றாமிடம்

A.P.Mathan   / 2014 ஜூலை 13 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில்  பிரேசில், நெதர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், நெதர்லாந்து அணி 3 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாமிடத்தை தனதாக்கிக்கொண்டது. 
 
போட்டி ஆரம்பித்து மூன்றாவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ரொபின் வன் பேர்சி பனால்டி உதை மூலம் முதல் கோலை அடித்தார். 17Mவது நிமிடத்தில் டலி பிளின்ட் அடித்த கோல் மூலம் நெதர்லாந்து 2 இற்கு 0 என முன்னிலைப் பெற்றது. போட்டி நிறைவடைய நான்கு நிமிடங்கள் இருந்த வேளையில் ஜோர்ஜினோ விஜ்நெல்டம் அடித்த கோல் மூலம் நெதர்லாந்து அணி 3 இற்கு 0 என வெற்றி பெற்றது. 
 
சொந்த நாட்டில் பிரேசில் அணி நான்காமிடத்தில் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்துள்ளது. இரண்டாவது தடவையாக நான்காமிடத்தில் பிரேசில் அணி உலகக்கிண்ணத்தை நிறைவு செய்துள்ளது. 
 
பிரேசில் அணி உலகக்கிண்ணத்தில் அடுத்தடுத்து மிக மோசமான தோல்விகளை பெற்றது இதுவே முதற் தடவை. கடந்த முறை இரண்டாமிடத்தைப் பெற்ற நெதர்லாந்து அணி இம்முறை மூன்றாமிடத்துடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்துள்ளது. இரண்டாவது தடவை மூன்றாமிடப் போட்டியில் விளையாடிய நெதர்லாந்து அணி முதற் தடவை மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. போட்டி நிறைவடைந்ததும் நெதர்லாந்து வீரர்களுக்கு மூன்றாமிடத்திற்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X