2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் சமநிலை நோக்கி?

A.P.Mathan   / 2014 ஜூலை 13 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலை முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்தப் போட்டியின் இறுதி நாள் இன்றாகும். நேற்றைய நான்காம் நாள் முடிவில் இந்தியா அணி தமது இரண்டாம் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்று 128 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. 
 
இதில் முரளி விஜய் 52 ஓட்டங்களையும், செற்றேஸ்வர் புஜாரா 55 ஓட்டங்களையும் பெற்றனர். மூயேன் அலி இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். முன்னதாக தமது முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 496 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்களையும், இறுதித் துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் அன்டர்சன்   81 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரும் இணைந்து இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக 198 ஓட்டங்களைப் பெற்றனர். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்கள் என்ற சாதனையை இந்த ஜோடி பெற்றுள்ளது. 111 வருடங்களின் பின்னர் இங்கிலாந்து சாதனையாக இந்த சாதனை புரியப்பட்டுள்ளது. கரி பலன்ஸ் 71 ஓட்டங்களையும், சாம் ரொப்சன் 59 ஓட்டங்களையும் இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் பெற்றனர். புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களையும், மொஹமட் சமி 2 விக்கெட்களையும் இந்தியாவின் பந்துவீச்சில் கைப்பற்றினர். 
 
இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 457 ஓட்டங்களைப் பெற்று  சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் முரளி விஜய் 146 ஓட்டங்களையும், டோனி 82 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 58 ஓட்டங்களையும், மொஹமட் சமி 51 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக மொஹமட் சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் 112 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட், பென் ஸ்டோக் ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X