2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

இலங்கை - தென் ஆபிரிக்கா டெஸ்ட் போட்டி

A.P.Mathan   / 2014 ஜூலை 15 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடர் இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு போட்டிகள் அடங்கிய தொடரின் முதற்ப் போட்டி இது. இந்தப் போட்டி காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. 
 
இரு அணிகளுக்குமிடையில் இதுவரை 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 10 போட்டிகளில் தென் ஆபிரிக்கா அணியும் 5 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன. 5 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இலங்கையில் இதுவரை இரு அணிகளுக்குமிடையில் 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 4 போட்டிகளில் இலங்கை அணியும், தென் ஆபிரிக்கா அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. 4 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. 
 
தென் ஆபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவராக ஹாசிம் அம்லா நியமிக்கப்பட்டு தலைமை தாங்கும் முதற்ப் போட்டியாக இந்தப் போட்டி அமையவுள்ளது. இலங்கை அணி சார்பாக இன்று உப்புல் தரங்க களமிறங்கவுள்ளார். இதேவேளை விக்கெட் காப்பாளர் பிரசன்னா ஜெயவர்தன உபாதை காரணமாக விளையாடாத நிலையில் தினேஷ் சந்திமால் விக்கெட் காப்பாளராக களமிறங்கவுள்ளார்.  
 
கிரேம் ஸ்மித் ஓய்வு பெற்றுள்ள நிலையில் தென் ஆபிரிக்காவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக டீன் எல்கார் களமிறங்கவுள்ளார். இந்த மாற்றங்களை தாண்டி இரு அணிகளும் வழமையான வீரர்களுடன் களமிறங்கவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X