.jpg)
இலங்கை கிரிக்கெட் அணியின் மேலதிக உதவி பயிற்றுவிப்பாளரான ருவான் கல்பகே, சுழல்ப் பந்து பயிற்றுவிப்பாளரான பியால் விஜயதுங்க ஆகியோர் தாங்கள் குறித்த பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதங்களை இலங்கை கிரிக்கெட் இடம் கையளித்துள்ளனர்.
அண்மையில் இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரி விளம்பரம் வெளியிட்டு இருந்தது. இந்த விளம்பரத்தில் குறித்த பதவிகளுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன. இந்த நிலையில் தங்கள் கடந்த காலப் பணிகள் திருப்தியளிக்கவில்லை என்ற அதிருப்தியான மன நிலையில் குறித்த இரு பயிற்றுவிப்பாளர்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர் என நம்பப்படும் அதேவேளை பங்களாதேஷ் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக ருவான் கல்பகேயும், சுழல்ப் பந்து பயிற்றுவிப்பாளராக பியால் விஜயதுங்கவும் இணையக் கூடிய வகையில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிக சம்பளத்துடனும், சலுககைகளுடனும் கூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்ருவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க இந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார் என்பது வெளிப்படை உண்மையாக அமிந்துள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்கக கடமையாற்றிய வேளையில் கல்பகே அவருடன் இணைந்து சுழல்ப்பந்து பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா ராஜினாமா கடிதங்கள் கிடைத்ததை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை இன்று நடைபெறவுள்ள நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இவர்களுக்கு அதிக சலுககைகளை வழங்கி தொடந்தும் அணியுடன் வைத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவு எடுக்கபப்டும் என கூறியுள்ளார். குறைந்தது இருவரில் ஒருவரையாவது தொடந்து வைத்து இருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.