A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 05 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய வீரர் ரவீந்தர் ஜடேஜா, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோரின் மோதலின் முடிவு தொடர்பில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையை மீள் முறையீடு செய்யுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரியுள்ளது. குறித்த வீரர்களின் பிரச்சினையை விசாரித்த சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் நீதிக்குழுவின் பணிப்பாளர் கோர்டன் லூயிஸ் போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் இரு வீரர்களும் குற்றம் அற்றவற்றவர்கள் எனக் கூறி தீர்ப்பை வழங்கி இருந்தார். ஆனாலும் இந்த தீர்ப்பு இந்திய அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது. குறித்த தீர்ப்புக்கான மீள் முறையீட்டை இந்திய அணி செய்ய முடியாது. மீள் முறையீடு செய்வதற்க்கான அதிகாரம் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சனுக்கு மாத்திரமே உள்ளது. 35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago