2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இந்திய, இங்கிலாந்து மோதலுக்கு ஐ.சி.சி முற்றுப் புள்ளி

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோரின் மோதலின் பின் உருவாகி இருக்கும் இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் மோதலுக்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை முற்றுப் புள்ளி வைக்க முனைகின்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, சர்வதேசக் கிரிக்கெட் பேரவையிடம் குறித்த பிரச்சினைக்கான தீர்ப்பை மீள் முறையீடு செய்யக் கோரி இருந்தது. 
 
10ஆம் திகதிக்கு முன்னர் முடிவு எடுக்கப்படும் என கூறி இருந்த சர்வதேசக் கிரிக்கெட் பேரவை, தற்போது மீள் முறையீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறித்த தீர்ப்பில் தங்களுக்கு பூரண திருப்பதி எனவும் அறிவித்துள்ளது. 
 
விசாரணைகள் இனி நடாத்தப்பட வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் இரு அணிகளுக்குள்ளும், கிரிக்கெட் சபைகளுக்குள்ளும் இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. அவற்றை சுமூகமான முறையில் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முற்ப்பட்ட போதும் அவையும் இன்னும் இழுபறியில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .