A.P.Mathan / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று இங்கிலாந்து ஹெடிங்க்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளதுடன் முதற்ப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் இங்கிலாந்து அணி இந்தப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியா அணி 1990ஆம் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. அதற்கு பிறகு இந்த முறையே அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்ற சாதனையை நிலை நாட்ட இந்தியா அணி முழு பலத்துடன் இன்று களமிறங்கும் என நம்பப்படுகின்றது. 42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
53 minute ago