2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலிடத்தை சீனா கைப்பற்றியுள்ளது

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நான்காம் நாளான நேற்றைய நிறைவில் சீனா முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. நேற்றுவரை போட்டிகளை நடாத்தும் வட கொரியா ஆதிக்கம் செலுத்தி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. 
 
சீனா  26 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 14 வெள்ளிப் பதக்கங்களையும் 18 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று. மொத்தம்க 58 பதக்கங்களைப் பெற்றுள்ளது. தென்  கொரியா  14 தங்கம், 15 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக 45 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 42 பதக்கங்களைப் பெற்று ஜப்பான் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. 13 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் அடங்கலாக  ஜப்பான் இந்தப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. மொங்கோலியா 3 தங்கப்பதக்கங்கள் அடங்கலாக  12 பதக்கங்களுடன்  நான்கமிடத்தையும், வட கொரியா 3 தங்கப் பதக்கங்கள்  அடங்கலாக 10 பதக்கங்களுடன் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் இடங்களை கசகஸ்தான், மியன்மார், வியட்நாம், ஈரான், சைனிஸ் தாய்பேய்,  ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .