2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்தின் லூயிஸ் ஹமில்டன் வெற்றி

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 05 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்ற போமுலா வன் கார்ப்பந்தயத்தில் இங்கிலாந்தின் லூயிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றுள்ளார். லூயிஸ் ஹமில்டனுக்கு மூன்றாவது தொடர்சியான குரோன்பிரி வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த பருவ காலத்தின் எட்டாவது வெற்றி ஆகும். ஜப்பான் குரோன்பிரி பந்தயத்தில், 44 ஓடுபாதைகளை நிறைவு செய்து இருந்த வேளை போட்டி நிறுத்தப்பட்டு லூயிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இரண்டாமிடத்தில் வந்து கொண்டு இருந்த ஜூல்ஸ் பியாஞ்சி விபத்துக்குள்லாமையினால் பந்தயம் சிவப்புக்கொடி காட்டப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனை விபத்துக்குள்ளான ஜூல்ஸ் பியாஞ்சி உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 
 
ஜூல்ஸ் பியாஞ்சியை நான் தாண்டி முதலிடத்துக்கு வந்த வேளையில் நல்லதொரு கார் ஓட்டம் உண்டு என நினைத்தேன். அணியைப் பொறுத்த மட்டில் இந்த வெற்றி சிறப்பானதாக உள்ளது. ஆனாலும் எனது கவலையெல்லாம் ஜூல்ஸ் பியாஞ்சி பற்றியே என வெற்றி பெற்ற லூயிஸ் ஹமில்டன் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஹமில்டன் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளார். இந்த வருடத்தில் இன்னும் நான்கு குரோன்பிரி போட்டிகள் மீதமுள்ள நிலையிலேயே இந்த இடத்தில ஹமில்டன் உள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .