2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் - அவுஸ்திரேலியா ஒ.நா.ச போட்டி இன்று ஆரம்பம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 07 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஐக்கிய அரபு ராச்சியத்தில் ஆரம்பிக்கவுள்ளது. 3 போட்டிகள் அடங்கிய தொடரின் முதல் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது. 
 
அவுஸ்திரேலியா அணி சில முக்கிய வீரர்களின் உபாதையினால் பின்னடைவுகளை சந்த்திதுள்ளது. எனவே பாகிஸ்தான் அணியிடம் இருந்து பெரிய சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாகிஸ்தான் அணி சைட் அஜ்மலின் இழப்பைத் தவிர மற்றைய முழுமையான வீரர்கள் விளையாடவுள்ளனர். மொஹமட் ஹபீசின் பந்துவீச்சு விதிமுறைகளை தாண்டி இருப்பதாக சம்பியன் லீக் தொடரில் சந்தேகம் எழுப்பப்பட்டமை இவர் பந்துவீசாமல் இருப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. மீறி பந்து வீசினால் சர்வதேசக் கிரிக்கெட் சபைக்கு முறையீடு செய்ய வாய்ப்புகளும் உள்ளன. இந்த நிலை பாகிஸ்தான் அணிக்கு அழுத்தத்தை தர வாய்ப்புகள் உள்ளன. 
 
இரு அணிகளும் இதுவரை 89 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 31 போடிகளில் வெற்றி பெற்றுள்ளன. அவுஸ்திரேலியா அணி 54 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்றுள்ள 11 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 6 போட்டிகளிலும், அவுஸ்திரேலியா அணி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .