2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் காலமானார்

Gavitha   / 2014 நவம்பர் 27 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பந்து தலையில்  பட்டதனால் பாதிப்புக்குள்ளாகியிருந்த அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் காலமானார்.

அவர், மரணமடைந்துவிட்டதை அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழுவின் பிரதான வைத்தியர் பீட்டர் புருக்கர் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, பந்து அவரது தலையில் பட்டுள்ளது. அதன் பின்னர் அவருடைய தலைப்பகுதி செயலிழந்திருந்தது என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இவர் 1,535 ஓட்டங்களை பெற்றதுடன் 3 சதங்களையும் 7 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .