A.P.Mathan / 2014 டிசெம்பர் 01 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிலிப் கியூசின் இறுதிக்கிரியைகள் 3ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. தமது சக வீரரின் இறுதி பிரியாவிடை நிகழ்வில் கலந்து, மறுதினமே போட்டியில் பங்குபற்றுவது வீரர்களுக்கு இயலாத காரியம். வீரர்கள் போட்டியில் பங்குபற்றும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களின் மனநிலைக்கும், மனித பண்புக்கும் நாம் முக்கியத்துவம் வழங்குகின்றோம். எனவே போட்டியை பிற்போடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ள போதும் எப்போது என்பது முடிவு செய்யப்படவில்லை. சூழ்நிலையை உணர்ந்துகொண்டு செயற்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது என கிரிக்கெட் அவுஸ்திரேலியா பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் சதர்லாண்ட் தெரிவித்துள்ளார். 17 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
2 hours ago
2 hours ago