A.P.Mathan / 2014 டிசெம்பர் 20 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையில் பிரிஸ்பேர்ண் மைதானத்தில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
மூன்றாவது நாள் ஆட்ட முடிவின்போது ஒரு விக்கெட்டை இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி, 224 ஓட்டங்களைப் பெற்றவேளையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, அவுஸ்திரேலிய அணிக்கு 128 என்ற இலகுவான வெற்றி இலக்கு அமைந்தது. ஆயினும் ஆடுகளத்தின் தன்மையை நன்கு பயன்படுத்திக்கொண்ட இஷான் சர்மா, சிறப்பாகப் பந்துவீசி அவுஸ்திரேலிய அணியை சிறிது தடுமாற்றத்துக்குள்ளாக்கினார்.
24ஆவது ஓவர் பந்துவீசப்பட்டுக்கொண்டிருந்தவேளையில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை அடைந்தது. கிறிஸ் ரோஜர்ஸ் 55 ஓட்டங்களையும் ஸ்டீபன் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றனர். இஷான் சர்மா 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் நாயனாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவானார்.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago