George / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 13ஆவது போட்டியில் இந்திய அணி, 130 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.
மெல்போர்னில் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) ஆரம்பமான 13ஆவது போட்டியில் இந்தியா – தென்னாபிரிக்கா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஒவரில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 307 ஓட்டங்களை குவித்தது.
இந்தியா சார்பாக தவான் 146 பந்துகளுக்கு 16 நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு 6 ஓட்டங்கள் அடங்கலாக 137 ஓட்டங்களை குவித்தார்.
60 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 3 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
விராட் கோலி 60 பந்துகளுக்கு 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்
அணித்தலைவர் டோனி, 11 பந்துகளுக்கு முகங்கொடுத்து 18 ஓட்டங்களை பெற்றநிலையில் ஆட்டமிழந்தார்.
308 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய தென்னாபிரிக்கா, 40.2 ஓவர்களில் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago