2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை அணி

Gavitha   / 2015 மார்ச் 01 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இலங்கை தோற்கடித்தது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (01) வெல்லிங்டன் மைதானத்தில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை குவித்தது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 121 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை அணியில் லஹிரு திரிமான்னே ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களையும்  குமார் சங்கக்கார 117 ஓட்டங்களையும் பெற்றார். 47.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 312 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது இலங்கை அணி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .