George / 2015 மார்ச் 04 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 25ஆவது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி பாகிஸ்தான் அணி, 129 ஓட்டங்களால் அபார வெற்றிப்பெற்றது.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று புதன்கிழமை(04) நேபியரில் ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை குவித்தது.
340 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .