George / 2015 மார்ச் 09 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 33ஆவது போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, பங்களாதேஷ் அணி 15 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று திங்கட்கிழமை(09) அடிலைடில் ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதனையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 275 ஓட்டங்களை பெற்றது.
276 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 260 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .