2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ண தொடரில் இருந்து சந்திமால் விலகல்

A.P.Mathan   / 2015 மார்ச் 10 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் சந்திமால், உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகியுள்ளார். அவுஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற போட்டியில் துடுப்பாடும் போது தசை பிடிப்பு அவருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக தொடர்ந்து துடுப்பாட முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். 

அவரை தொடர்ந்து கண்காணித்த வந்த உடல் இயக்க நிபுணர் அவர் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து, தினேஷ் சந்திமால் உலகக் கிண்ண தொடரில் தொடர்ந்து விளையாட முடியாமல் நாடு திரும்பவுள்ளார். அணியுடன் ஏற்கெனவே இணைந்து பயிற்சிகளை பெற்று வரும் குஷால் ஜெனித் பெரேரா, சர்வதேசக் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவினால் மாற்று வீரராக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் 11 பேர் அடங்கிய இறுதி அணிக்குள் தெரிவானால் மத்திய வரிசை வீரராகவே விளையாடுவர் என நம்பப்படுகின்றது. கடந்த போட்டியில் உப்புல் தரங்க, மத்திய வரிசை வீரராக அணியில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை உலகக் கிண்ண குழுவில் இருந்து உபாதை காரணமாக தம்மிக்க பிராசாத், ஜீவன் மென்டிஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன ஆகியோர் விலகியுள்ளனர். ரங்கன ஹேரத்திற்கு கையில் ஏற்பட்ட காயம் மாறாத நிலையில் அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலை உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .