George / 2015 மார்ச் 11 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 35ஆவது ஆட்டத்தில் 148 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி அட்டகாச வெற்றிப்பெற்றுள்ளது.
ஹோபார்டில் இன்று புதன்கிழமை(11) ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 363 ஓட்டங்களை விளாசியது.
364 ஓட்டங்களை இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 148 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின் போது, இலங்கை வீரர் குமார் சங்கக்கார, ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று சாதனை படைத்தார்.
உலகக்கிண்ண போட்டிகளில், இங்கிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இவர் ஏற்கெனவே மூன்று சதங்களை பெற்றுள்ளார்.
இன்று பெற்ற சதமானது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சங்கக்கார பெற்ற 25ஆவது சதமாகும்.
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago
safnas Thursday, 12 March 2015 03:23 AM
weldon sanga.
Reply : 0 0
safnas Thursday, 12 March 2015 03:24 AM
weldon sanga.
Reply : 0 0
safnas Thursday, 12 March 2015 03:24 AM
weldon sanga.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
37 minute ago
43 minute ago