A.P.Mathan / 2015 மார்ச் 14 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், காலிறுதிப் போட்டிகளில் விளையாட தயாராக இருப்பதாக இலங்கை அணியின் முகாமையாளர் மைக்கல் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் குதிக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக களத்தடுப்பில் இருந்து வெளியேறிய நிலையில், அவரின் உபாதை அணிக்கு பின்னடைவை உருவாக்குமோ என்ற சந்தேகம் நிலவியது. அவருக்கு ஓய்வு மாத்திரமே தேவைப்படுவதாகவும், காலிறுதிப் போட்டியில் அவரால் நிச்சயமாக விளையாட முடியும் எனவும் முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அஞ்சலோ மத்தியூஸ் இன்னமும் பயிற்சிகளில் ஈடுபடவில்லை. இலங்கை அணி 18ஆம் திகதி காலிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அவர் முழுமையாக குணமடைந்து பயிற்சிகளிலும் ஈடுபடமுடியும். நாளைய தினம் வலைப் பயிற்சிகளில் ஈடுபடுவார் என தெரிவித்துள்ள சொய்சா, இன்றும் அவர் சாதாரண பயிற்சிகளில் ஈடுபாட்டார் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான போட்டியில் கையில் கிழிவு ஏற்பட்டு, தையல் போடப்பட்ட ரங்கன ஹேரத் -விளையாட முடியுமா என்ற சந்தேகம் இன்னமும் நிலவுகின்றது. நேற்று (13) அவரின் கையில் போடப்பட்ட தையல் பிரிக்கப்பட்டுள்ளது. காயம் குணமடைய இன்னும் சிறிதளவு ஓய்வு அவருக்கு தேவைப்படுகின்றது. இன்று பந்து வீச்சு பயிற்சிகளில் அவர் ஈடுபடும் நோக்கம் இருந்த போதும் மேலதிக ஓய்வு தேவை என்ற காரணத்தினால் அவர் நாளை பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபடுவார் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
80% ரங்கன ஹேரத் அடுத்த காலிறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை அணியின் உபதலைவர் லஹிறு திரிமன்னே தெரிவித்துள்ளார்.
35 minute ago
43 minute ago
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
50 minute ago
56 minute ago