Kanagaraj / 2015 மார்ச் 27 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 8 ஆம் திகதி ஆரம்பிக்கவிருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் டெல்லி டெயார் டெவில்ஸ் அணியின் தலைவராக தென் ஆபிரிக்க அணியின் வீரர் ஜே. பி டுமினி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், யுவாராஜ் சிங் போன்றவர்கள் இருந்தும் ஜே.பி டுமினிக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
டுமினி, பல போட்டிகளில் பங்குபற்றி நல்ல அனுபவத்தை பெற்ற ஒரு வீரர். தலைவராக செயற்படக் கூடியவர். எனவே தான் அவர், அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அணியின் பயிற்றுவிப்பாளர் கரி கேர்ஸடன் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவின் பயிற்றுவிப்பாளராக கேர்ஸடன் இருந்த காலத்திலேயே டுமினி மீண்டும் அணிக்குள் வந்தார் என்பதும் கேர்ஸடனின் திட்டங்களுக்குள் உள்ளடக்கப்பட்ட வீரர் டுமினி என்பதும் குறிப்பிடத்தக்கது.
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago