George / 2015 மார்ச் 29 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலகக்கிண்ண போட்டியின் இறுதிபோட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, அவுஸ்திரேலியா வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
இது அவுஸ்திரேலிய அணி வெற்றிக்கொண்ட 5ஆவது உலகக்கிண்ணம் என்பதுடன் அதிகமான உலகக்கிண்ணங்களை வெற்றிகொண்ட அணி, என்ற பெருமையையும் ஆஸி பெற்றுக்கொண்டுள்ளது.
உலகக்கிண்ண போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆரம்பமானது.
இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 45 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து சார்பில் ஜீ.டி.எலியட் 81 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டங்கள் ஓரு 6 ஓட்டம் அடங்கலாக 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, 184 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய 33.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களை பெற்று உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.
அவுஸ்திரேலியா சார்பாக மைக்கல் கிளார்க் 72 பந்துகளுக்கு 10 நான்கு ஓட்டங்கள் ஒரு 6 ஓட்டம் அடங்கலாக 74 ஒட்டங்களை குவித்தார்.
ஸ்மித் 54 ஓட்டங்களையும் வோர்னர் 45 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் இறுதியில் வோட்சன் 2 ஓட்டங்களுடனும் ஸ்மித் 56 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருந்தனர்.
37 minute ago
45 minute ago
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
52 minute ago
58 minute ago