George / 2015 மார்ச் 30 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியின் தலைவராக ஆஷர் அலி நியமிக்கப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போதைய பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்காதா ஆஷர் அலி, மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரின் இடத்துக்கு அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என நம்பப்படுகின்றது.
இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் சகரியார் கான் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான ஆஷர் அலி 14 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் தலைவராக கடமையாற்றிய அனுபவம், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் உள்ள நல்ல உறவு என்பன இவர், அணித்தலைமை பொறுப்பை பெற வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.
மிஸ்பா உல் ஹக், வொக்கார் யூனிஸ் ஆகியோரும் இவரை பரிந்துரை செய்துள்ளனர். பாகிஸ்தான் அணியின் அண்மைக்கால அதிரடி துடுப்பாட்ட வீரராக மாறியுள்ள விக்கெட் காப்பாளர் சப்ராஸ் அஹமட் உப தலைவராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகின்றது.
இவருக்கே இருப்பதுக்கு-20 போட்டிகளின் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் தெரிவுக்குழுவையும் சகரியார் கான் மாற்ற முடிவு எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான 62 வயதான ஹரூன் ரசீட் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார்.
அந்தக் குழுவில் இடம்பெறும் 4 அங்கத்தவர்களையும் மாற்றவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago