A.P.Mathan / 2015 மே 20 , மு.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைவர் ஜெமி அட்கின்சன் தனது அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினார். கடந்த 5 தொடர்களில் அவரின் துடுப்பாட்டம் நல்ல முறையில் அமையவில்லை. எனவே துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் முகமாக குறித்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி நபிபியா அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஹொங்கொங் அணி வெற்றி பெற்றதன் பின்னர் அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். தன்வீர் அப்சால் தொடரின் மிகுதிப் போட்டிகளுக்கு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு இவர் ஆசியக் கிண்ண அணிக்காக அறிவிக்கப்பட்டபொது 1990ஆம் ஆண்டு பிறந்த முதல் சர்வதேச வீரராக திகழ்ந்தார். 24 வயதான விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரரும் ஆவர் ஜெமி அட்கின்சன்.o
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .